சீனாவின் பசுமை மற்றும் கார்பன் நடுநிலை நகரங்கள் திட்டத்துக்கு அங்கீகாரம்
2022-05-25 19:28:54

சீன நிதி அமைச்சகத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, சீனாவின் பசுமை மற்றும் கார்பன் நடுநிலை நகரங்கள் திட்டத்துக்கு உலக வங்கி அண்மையில் அங்கீகாரம் அளித்துள்ளது. உயிரினப் பல்வகைமை பாதுகாப்பை இத்திட்டத்தில் இணையும் நகரங்களின் வளர்ச்சிப் போக்கில் சேர்த்து, கார்பன் நடுநிலைக்கான நெறிமுறையை நிர்ணயிப்பது அதன் நோக்கமாகும். இத்திட்டத்துக்கான நிதித் தொகை 2 கோடியே 69 லட்சத்து 9100 அமெரிக்க டாலராகும்.

உயிரினப் பல்வகைமை பாதுகாப்பு மற்றும் கார்பன் நடுநிலையை மேம்படுத்துவதன் மூலம் நகரங்களின் உயர்தர வளர்ச்சிக் கட்டுக்கோப்பை வலுப்படுத்துவது, உயிரினப் பல்வகைமை மற்றும் காலநிலை மாற்றத்துக்கான ஒருங்கிணைந்த தீர்வுமுறையை ஆதரித்து, இயற்கை மற்றும் கார்பன் நடுநிலைக்கு திட்டம் தீட்டி முதலீடு செய்வது, அறிவுகளின் பகிர்வு, திறமை வளர்ப்பு மற்றும் திட்டப்பணி மேலாண்மைக்கு ஆதரவளிப்பது ஆகியவை இத்திட்டத்தின் மூன்று பகுதிகளாகும்.

மதிப்பீட்டின்படி, இத்திட்டம் 2022 முதல் 2027ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.