7வது பிரிக்ஸ் நாட்டுப் பண்பாட்டுத் துறை அமைச்சர்களின் கூட்டம்
2022-05-25 19:53:48

7வது பிரிக்ஸ் நாட்டுப் பண்பாட்டுத் துறை அமைச்சர்களின் கூட்டம் மே 24ஆம் நாள் காணொளி வழியாக நடைபெற்றது. பண்பாட்டுத் துறையில் எண்ணியல் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றுவது, பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையிலான பண்பாட்டுப் பரிமாற்ற மேடையின் உருவாக்கத்தை முன்னேற்றுவது முதலிய விவகாரங்கள் குறித்து ஆழமான விவாதம் நடைபெற்றது. 

சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஹு ஹேபிங் இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார். பிரிக்ஸ் நாடுகளின் மானிட தொடர்புப் பரிமாற்றம் குறித்து அவர் 5 முன்மொழிவுகளை வழங்கினார். முதலாவதாக, சகிப்புத் தன்மை மற்றும் பரஸ்பர கற்றலில் ஊன்றி நிற்க வேண்டும். இரண்டாவதாக, பயன்தரும் ஒத்துழைப்பில் ஊன்றி நிற்க வேண்டும். மூன்றாவதாக, புதுமை வளர்ச்சியில் ஊன்றி நின்று எண்ணியல் பண்பாட்டுத் தொழிலைப் பெரிதும் வளர்க்க வேண்டும். நான்காவதாக, பண்பாட்டு மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஐந்தாவாதாக, இளைஞர்களின் பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று அவர் கூறினார்.