பொய்களை உருவாக்கி வரும் அமெரிக்கா
2022-05-25 19:22:29

மனித உரிமைக்கான ஐ.நா உயர் ஆணையர் பேச்லெட் அம்மையார் சின்ஜியாங் மனித உரிமை குறித்து கட்டுப்பாடு இல்லாத நிலையில், பன்முகங்களிலும், சுதந்திரமாகவும் ஆய்வு செய்ய சீனா அனுமதி அளிக்காது என்று அமெரிக்கா அவதூறு கூறியது. இந்நிலைமையில், பேச்லெட் அம்மையார் சீனாவில் பயணம் மேற்கொள்வது தவறு என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 25ஆம் நாள் கூறுகையில்,

மனித உரிமைக்கான ஐ.நா உயர் ஆணையர் சீனாவில் பயணம் மேற்கொள்வதில் சீனாவின் நிலைப்பாடு மாறவில்லை. உயர் ஆணையர் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளின் பல துறையினர்களும் சீனாவில் பயணம் மேற்கொள்வதை சீனா வரவேற்கிறது என்றார்.

சின்ஜியாங்கில் இன ஒழிப்பு மற்றும் கட்டாய உழைப்பு பற்றிய தனது கூற்றுகள் பொய்களாக சர்வதேச சமூகத்தால் அறிந்து கொள்ளப்படும் என்பது பற்றி அமெரிக்கா கவலைப்படுவதால், அது மேலதிகமான பொய்களை உருவாக்கி, சர்வதேச செய்தி ஊடகங்களை தவறாக வழிக்காடுகின்றது என்று அவர் தெரிவித்தார்.