அமெரிக்க அரசியல்வாதிகளின் மனச்சாட்சி எத்தனை உயிரிழப்பினால் எழுப்பப்பட முடியும்?
2022-05-25 20:25:01

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் உவால்டெ நகரிலுள்ள துவக்கப் பள்ளி ஒன்றில் 24ஆம் நாள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், குறைந்தது 19 குழந்தைகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இத்தகைய சம்பவம் எங்கள் நாட்டில் மட்டுமே நிகழும் என்று அந்நாட்டின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த செனெட் அவை உறுப்பினர் கிறிஸ் மார்ஃபி அன்று உரை நிகழ்த்துகையில் கூறினார்.

அமெரிக்காவில் நிகழ்ந்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், அமெரிக்கர்களை நம்பிக்கை இழந்த நிலையில் வைத்துள்ளது. துப்பாக்கி வன்முறை ஆவணக்காப்பகம் என்ற லாப நோக்கற்ற அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, 2012ஆம் ஆண்டில் சாந்தி ஹுக் துப்பாக்கி சூட்டு சம்பவம் நிகழ்ந்தது முதல் இதுவரை அமெரிக்காவில் 4 பேருக்கு மேற்பட்ட உயிரிழப்பை ஏற்படுத்திய 3500க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

துப்பாக்கி கட்டுப்பாட்டுப் பிரச்சினை, அமெரிக்காவின் அரசியல் கட்சிகளின் போட்டி, நலன் குழுக்கள், இனவெறி உள்ளிட்ட பல பிரச்சினைகளுடன் தொடர்புடையது. அமெரிக்க அரசியல், வாக்குகள் மற்றும் பணத்துக்குச் சேவைபுரிவதால், துப்பாக்கி கட்டுப்பாட்டை செயல்படுத்துவது மிகவும் கடினமாகும்.

மேலும், அரசியல்வாதிகள் ஆயுத வியாபாரிகளுடன் இணைந்து செயல்படும் முறை, அமெரிக்க கொள்கை வகுப்பு மற்றும் சமூகப் பொது கருத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான், அதிகமாக நிகழ்ந்து வரும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், தூங்குவது போல் நடிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகளை எழுப்ப முடியாது.