ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலாவது குரங்கம்மை பாதிப்பு
2022-05-25 13:18:11

ஐக்கிய அரசு அமீரகத்தில் முதல்முறையாக குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் 24ஆம் நாள் அறிவித்தது.

நோய் தொற்றைக் கண்காணித்து வருவதுடன், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மக்கள் அதிகாரப்பூர்வத் தகவல்களை மட்டும் பின்பற்ற வேண்டும் என்றும் பொய் தகவல்களைப் பரப்பக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதே நாளில், செக் குடியரசிலும் குரங்கம்மை நோயின் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.