பிரிட்டனில் எண்ணெய் விலை புதிய உச்சத்தை எட்டியது!
2022-05-26 13:30:41

உக்ரைன்– ரஷிய மோதலால், பிரிட்டனில் எண்ணெய் விலை  கடுமையாக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் செய்தி ஊடங்கள் வெளியிட்ட தகவலின்படி, மே 25ஆம் நாள் பிரிட்டனில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.7 பவுண்டு தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதே வேளையில், டீசல் விலையும் லிட்டருக்கு 1.81பவுண்டு அதிகரித்து வரலாற்றில் இல்லாத  அளவிற்கு அதிகப் பதிவை உருவாக்கியுள்ளது. 

எண்ணெய் விலை உயர்வு பிற நுகர்வுப் பொருட்களின் விலை உயர்வையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் பிரிட்டனில் வாழ்க்கைச் செல்வு கணிசமாக உயர்ந்துள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்னர்.  

பிரிட்டனின் 6 முதல் 8 விழுக்காடான கச்சா எண்ணெயும் 18 விழுக்காடான டீசல் எண்ணெயும் ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.