ரஷிய எண்ணெய் தடையை ஹங்கேரி ஆத்தரிக்காது
2022-05-26 11:27:02

ரஷிய எண்ணெய் தடை குறித்து விவாதிக்க, இத்திங்கள் இறுதியில் ஐரோப்பிய ஆணையம் சிறப்பு உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது. இது குறித்து ஹங்கேரி வெளியுறவு அமைச்சர் சிஜர்டோ கூறுகையில், இத்தடைகள் ஹங்கேரி எரியாற்றல் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கும். எரிபொருள் விநியோகப் பிரச்சினைக்கு தீர்வு காணா விட்டால், இத்தடைகளுக்கு ஹங்கேரி ஆதரவு அளிக்காது. இவ்வாரத்தில் விரிவான தீர்வை முன்வைப்பது, நடைமுறைக்குப் புறம்பானது. அதனால், தொடர்புடைய பிரச்சினைகளை, அடுத்த வார உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டாம். அது, ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமைக்கு கடும் இடர்ப்பாட்டை விளைவிக்கும் என்று தெரிவித்தார்.

ஐரோப்பிய ஆணையத்தின் முன்மொழிவு, அனைத்து 27 உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தான், செல்லுபடியாகும். ஹங்கேரி, ரஷியாவில் இருந்து எரிபொருள் இறக்குமதியை பெருமளவில் சார்ந்திருக்கிறது.  60 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட எண்ணெய், 85 விழுக்காட்டு எரிவாயு ஆகியவை ரஷியாவைச் சார்ந்திருக்கும்.

இந்நிலையில், மே 4ஆம் நாள் ரஷியா மீதான 6ஆவது சுற்று தடை பற்றிய தொடர்பான முன்மொழிவு, ஹங்கேரியின் எதிர்ப்பினால், 16ஆம் நால் நாடபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.