விண்வெளி ஒத்துழைப்புக்கான பிரிக்ஸ் குழு உருவாக்கம்!
2022-05-26 11:00:45

விண்வெளி ஒத்துழைப்புக்கான பிரிக்ஸ் குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கட்டதையடுத்து  அதன் முதலாவது கூட்டம் மே 25ஆம் நாள் இரவில் காணொலி வழியாக நடைபெற்றது.

பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே தொலை உணர்வு செயற்கைக்கோள் கூட்டம் தொடர்பான ஒத்துழைப்புக்கு இந்தக் குழு வழிகாட்டவுள்ளது. பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் தடுப்பு மற்றும் குறைப்பு, காலநிலை மாற்றச் சமாளிப்பு உள்ளிட்ட  துறைகளில் பிரிக்ஸ் நாடுகளின் விண்வெளி நிறுவனங்கள் மேலும் உயர்ந்த நிலை ஒத்துழைப்பை மேற்கொண்டு, தரவுகளின் பகிர்வு மற்றும் பயன்பாட்டை முன்னேற்ற இக்குழு பாடுபடும்.  இது, பிரிக்ஸ் நாடுகளின் நெடுநோக்கு ஒத்துழைப்புக்குப் புதிய பங்களிப்பு மற்றும் புதிய உந்து சக்தியை கொண்டு வரும் என்று சீனத் தேசிய விண்வெளி நிர்வாகத் தலைவர் சாங் கேஜியன் தெரிவித்தார்.