ஐக்கிய அரபு அமீரகத்தில் உணவகத்தில் எரிவாயு வெடிப்பு
2022-05-26 11:25:42

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியிலுள்ள உணவகம் ஒன்றில் மே 23ஆம் நாள் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டது. அவ்விபத்தில் 120க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இவர்களில் 106 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்த 2 பேரில் ஒருவர் இந்தியர் ஆவார் என்று அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் 25ஆம் நாள் ஊடகங்களுக்குத் தெரிவித்தது.

பாகிஸ்தான் தூதரகத்தின் தகவலின்படி, இவ்விபத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார், 16 பேர் காயமுற்றனர். மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையின்படி, எரிவாயுவின் முறையற்ற பயன்பாடு தான் இவ்விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 34.2 இலட்சம் இந்தியர்கள், அங்கு வசிக்கும் மிக அதிகமான வெளிநாட்டவர்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்த மக்கள் தொகை, 97.7 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.