சீனாவில் மேம்பட்டு வரும் இயற்கைச் சூழல் தரம்
2022-05-26 17:55:31

சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 26ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், 2021ஆம் ஆண்டு சீன இயற்கைச் சூழ்நிலைக்கான அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டில் சீனத் தேசிய இயற்கைச் சூழல் தரத்துக்கான முக்கிய இலக்குகள் தடையின்றி நிறைவேற்றப்பட்டு, சுற்றுச்சூழல் தரம் பெரிதும் மேம்பட்டுள்ளது.

மேலும், 2021ஆம் ஆண்டு தேசிய இயற்கைச் சூழல் மற்றும் உயிரினப் பல்வகைமை பாதுகாப்பு பற்றிய அடிப்படை நிலைமையும், 2021ஆம் ஆண்டு சீனக் கடல் சூழ்நிலைக்கான அறிக்கையும் வெளியிடப்பட்டன. இயற்கைச் சூழல் துறையில், 2020ஆம் ஆண்டைக் காட்டிலும், கடந்த ஆண்டின் தேசிய இயற்கைச் சூழல் தரக் குறியீடு சீராக இருந்தது. கடல் கண்காணிப்பு முடிவின்படி, கடந்த ஆண்டில் சீனாவின் கடல் சூழ்நிலை நிதானமாக மேம்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.