அன்னிய முதலீடுகளுக்கு சிறந்த இடமாக திகழும் சீனா!
2022-05-26 16:11:22

பிரிக்ஸ் நாட்டு புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மார்கோஸ் ட்ரோய்ஜோ 25ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் தாவோஸ் வட்டத்தில் உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்ட போது கூறுகையில்,

உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பையும் பொருளாதார கட்டமைப்பின் மாற்றத்தையும் மேற்கொண்டு வரும் சீனா, உலகளவில் அன்னிய முதலீடுகளுக்கு ஈர்ப்பாற்றல் மிக்க நாடாக தொடர்ந்து இருந்து வருகிறது என்றார்.

 

140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவின் பொருளாதார அளவு மிக பெரியது. இது நிறைய அன்னிய முதலீடுகளை ஈர்த்து வருகிறது. உயர் நிலை வெளிநாட்டு திறப்பு பணியில் ஊன்றி நிற்கும் சீனா, உலகமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான முக்கிய ஆற்றலாக திகழ்கிறது. எதிர்காலத்தில், அன்னிய முதலீட்டுக்கான முதல் இரண்டு இடங்களில் ஒன்றாக சீனா விளங்கும். சீன பொருளாதார மாதிரி மாறினாலும், உலக நாடுகளுக்கு நிறைய புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.