சீனாவின் மீது அமெரிக்காவின் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு
2022-05-26 17:06:35

சீனாவுக்கும் பசிபிக் தீவு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பின் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் 25ஆம் நாள் ஆதாரமின்றி குற்றஞ்சாட்தினார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பிங் 26ஆம் நாள் கூறுகையில்,

சீனாவும் தென் பசிபிக் தீவு நாடுகளும் ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் இரு தரப்புகளுக்கிடையில் தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வரும் ஒத்துழைப்பு, இரு தரப்பு மக்களுக்கு நலன் தந்துள்ளது என்றார்.

சமநிலையில் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பு, இரு தரப்புகளுக்கு நலன் தந்து, பிரதேச அமைதிக்கும் நிதானத்திற்கும் வளர்ச்சிக்கும் துணை புரியும். தொடர்புடைய நாடுகள் இவ்வொத்துழைப்பை நேர்மையாகவும் சரியாகவும் பார்க்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக வாங் தெரிவித்தார்.