2022 சீன சர்வதேச பெருந்தரவு தொழில் பொருட்காட்சியில் ஹுவாங் குன்மிங்கின் உரை
2022-05-26 16:38:28

2022ஆம் ஆண்டு சீன சர்வதேச பெருந்தரவு தொழில் பொருட்காட்சி 26ஆம் நாள் குய்சோ மாநிலத்தின் குய்யாங் நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், பரப்புரை துறை அமைச்சருமான ஹுவாங் குன்மிங் காணொளி வழியாக துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் பெருந்தரவு தொழிலின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, சீன எண்ணியல் பொருளாதாரத்தின் உயர்நிலை வளர்ச்சிக்கும், எண்ணியல் சீனா எனும் கட்டுமானத்துக்கும் அறிவியல் பூர்வமாக வழிகாட்டியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், புதிய யுகத்தில் எண்ணியல் பொருளாதாரம் நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்குகின்றது. பொது நலச் சேவையின் எண்ணியல் மயமாக்கத்தை அதிகரித்து, எண்ணியல் பொருளாதார மேலாண்மையை மேம்படுத்தி, எண்ணியல் மயமாக்கத்தின் நலன்களை பொது மக்கள் சிறப்பாக அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.