உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவின் பங்கு
2022-05-27 16:41:02

உலகப் பொருளாதார மன்றத்தின் 2022ஆம் ஆண்டு கூட்டம் மே 26ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் தாவோஸில் முடிவடைந்தது. இக்கூட்டத்தின் போது, உலக பொருளாதார மன்றத்தின் சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு பிரிவின் பொறுப்பாளர் சீன் டோஹெர்டி சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில்,

கோவிட்-19 நோய்தொற்று, மோதல், காலநிலை மாற்றம் போன்ற சவால்கள், பொருளாதார பிளவு, பல்வேறு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறைவு, பண வீக்கம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தக் கூடும். பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, வர்த்தகத் தடை நீக்கம் ஆகியவை இப்பிரச்சினைகளுக்கான தீர்வு முறைகளாகும் என்றார்.

கடந்த ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்த 20ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த சில ஆண்டுகளில் நெகிழி மாசுபாட்டு தடுப்பு, முதலீட்டு வசதிமயமாக்கம் உள்ளிட்ட துறைகளில் சீனா முக்கிய பங்காற்றியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.