2022ஆம் ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி - மூடிஸ் நிறுவனம் கணிப்பு !
2022-05-27 16:17:57

மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் எனும் நிறுவனம் மே 26ஆம் நாள், வெளியிட்ட அறிக்கையில், 2022ஆம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதக் கணிப்பை முந்தைய 9.1 சதவீதத்திலிருந்து 8.8 சதவீததமாகக் குறைத்துள்ளது.

2021ஆம் ஆண்டின் 4ஆவது காலாண்டு முதல் இவ்வாண்டின் முதல் 4 மாதங்கள் வரை, இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகம் நிலையாக கண்டுள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய், உணவு, உரம் ஆகியவற்றின் விலை உயர்வு, குடும்பங்களின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களின் செலவைக் குறைத்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி உயர்வினால், தேவைகளுக்கான மீட்சி தாமதமாகும் என்று மூடிஸ் நிறுவனம் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.