தொழில் நிறுவனங்களின் லாபம் 3.5 விழுக்காடு அதிகரிப்பு
2022-05-27 14:48:27

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் மே 27ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, ஏப்ரல் திங்களில், சீனாவின் சில பகுதிகளில் தொற்றுநோய் பாதிப்பு காரணமாக, தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் இயக்கத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்களின் லாபம் குறைந்துள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் வரை, சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் லாபம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.5 விழுக்காடு அதிகமாகும்.

அடுத்த கட்டம், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டையும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியையும் பயனுள்ள முறையில் ஒருங்கிணைக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தொழில்துறைப் பொருளாதாரத்தின் மீட்சியை ஊக்குவிக்க செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.