பிரிக்ஸ் கல்வித் துறை அமைச்சர்கள் கூட்டம்
2022-05-27 10:22:51

பிரிக்ஸ் நாடுகளின் கல்வித் துறை அமைச்சர்களின் மாநாடு மே 26ஆம் நாள் இரவு பெய்ஜிங்கில் காணொலி வழியாக நடைபெற்றது. சீனக் கல்வித் துறை அமைச்சகத்தின் தலைமையில் நடந்த மாநாட்டில், பிரேசில், ரஷியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் கல்வித் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டு கூட்டறிக்கை ஒன்றை நிறைவேற்றினர்.

கல்வித் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் அடுத்த கட்ட ஒத்துழைப்புக்கான முக்கிய அம்சங்கள் மற்றும் திசை இக்கூட்டறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கல்வியின் எண்முறை மாற்றம், தொழில்முறை கல்வி ஒத்துழைப்பு, பிரிக்ஸ் நாடுகளிடையில் நிலையான வளர்ச்சி வாய்ந்த கல்வி ஒத்துழைப்பின் எதிர்காலம் ஆகிய 3 தலைப்புகள் பற்றி சீன அரசின் நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளை சீனத் தரப்பு அறிமுகம் செய்துள்ளது.

திறப்பு, பல்வேறு தரப்புகளை உள்ளடக்கிய தன்மை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி என்ற பிரிக்ஸ் குறிக்கோளைப் பின்பற்றி கல்வித் துறையிலான அறைகூவல்களைக் கூட்டாக சமாளித்துக் கல்வித் துறையில் 5 நாடுகளின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாக பிரிக்ஸ் நாடுகளின் கல்வித் துறை அமைச்சர்கள் அனைவரும் ஒருமனதாக தெரிவித்தனர்.