அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி விளம்பர நிகழ்ச்சி
2022-05-27 15:25:23

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் உவால்டி நகரிலுள்ள துவக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம், அமெரிக்காவை அதிர்ச்சிய செய்த போதிலும், அமெரிக்காவின் தேசிய ரைபில் துப்பாக்கி சங்கம், உள்ளூர் நேரப்படி மே 27ஆம் நாள் ஹூஸ்டனில் மூன்று நாள் துப்பாக்கி விளம்பர நிகழ்ச்சியை நிறுத்தமின்றி தொடர்ந்து தொடங்கி வைத்தது.

துப்பாக்கிகளைத் தடை செய்வதையும் கட்டுப்படுத்துவதையும் ஆதரிக்க மாட்டார் என்று இச்சங்கத்தின் இயக்குனர் குழு உறுப்பினரான ஃபில் ட்ரவெலி கூறினார். மனநலம் தொடர்பான சுகாதார சேவையில் கவனம் குவிப்பதோடு, துப்பாக்கி வன்முறையைத் தடுக்கப் பாடுபடும் என்றும் அவர் கூறினார்.