அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் மீது சீனாவின் குற்றச்சாட்டு
2022-05-27 20:15:26

அண்மையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ப்லின்கன் சீனா பற்றி நிகழ்த்திய உரையை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 27ஆம் நாள் மறுத்துரைத்தார்.

இவ்வுரை பொய்யான தகவல்களைப் பரப்பி, சீன அச்சுறுத்தல் என்ற கூற்றை பிரச்சாரம் செய்து, சீனாவின் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் பற்றி அவதூறு கூறி, சீன உள்விவகாரத்தில் தலையீடு செய்துள்ளது. சீன வளர்ச்சியைத் தடுப்பதும் அமெரிக்காவின் மேலாதிக்கவாதத்தைப் பேணிக்காப்பதும் இதன் நோக்கமாகும். இது குறித்து சீனா கடுமையான மனநிறைவின்மை மற்றும் உறுதியான எதிர்ப்பைத் தெரிவிக்கிறது என்று வாங் வென்பின் தெரிவித்தார்.