வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக்கு சீனாவின் நடவடிக்கைகள்
2022-05-27 15:26:35

பொருளாதாரம், தொழில் சங்கிலி மற்றும் வினியோக சங்கிலியின் நிலைத்தன்மையை நிலைநிறுத்தும் விதம், வெளிநாட்டு வர்த்தகத்தை நிதானப்படுத்தி மேம்படுத்துவதற்கான விவரமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுள்ளது.

சீன அரசவை பணியகம் 26ஆம் நாள் வெளியிட்ட வழிகாட்டல் ஒன்றின்படி, முக்கிய வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கான சேவைகள் வலுப்படுத்தப்படுவதோடு, வெளிநாட்டு வர்த்தக சரக்குகளின் புழக்கத்தை உத்தரவாதம் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கான நிதியுதவியும் எல்லை கடந்த மின்னணு வணிகத்துக்கான ஆதரவும் வலுப்படுத்தப்படும்.

மேலும், இறக்குமதியை முன்னேற்றுவதற்கான புதிய தொகுதி செயல் விளக்க மண்டலங்களும் உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.