எதிரெதிர் நிலையைத் தூண்டிய ஜப்பானின் அரசியல்வாதிகள்
2022-05-27 17:36:04

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் அண்மையில் டோக்கியோவில் குவாட் உச்சி மாநாட்டை நடத்தின. ஜப்பான் தலைமையமைச்சர் இம்மாநாட்டுக்குத் தலைமைத் தாங்கினார்.

ஜப்பானின் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இராணுவக் கட்டுமானம், சமூக உட்கட்டமைப்பு கட்டுமானம் ஆகிய 2 துறைகளில் இம்மாநாடு சீனாவை எதிர்த்து செயல்படும். ஆனால், இது நிறைவேற்றப்பட முடியாத கடமையாகும்.

இம்மாநாட்டுக்குப் பிறகு ஜப்பான் தலைமையமைச்சர் கூறுகையில், வரும் 4 ஆண்டுகளில் ஆசிய-பசிபிக் பிரதேசத்துக்கு 5000 கோடிக்கும் மேலான அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதியுதவி மற்றும் முதலீட்டை வழங்க உள்ளதாக தெரிவித்தார். ஆனால், இவ்வளவு முதலீடு இந்தியாவின் தேவையை மட்டுமே நிறைவு செய்ய முடியாது. தரவுகளின்படி, 2013 முதல் 2021ஆம் ஆண்டு வரை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள தொடர்புடைய நாடுகளில் சீனாவின் நேரடி முதலீடு 16 ஆயிரத்து 130 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.

ஆசிய பசிபிக் பிரதேசத்தின் அமைதி மற்றும் வளர்ச்சி, பெரும் முயற்சிகளின் மூலம் கிடைக்கப்பட்டது. அரசுரிமை மற்றும் பாதுகாப்பான வளர்ச்சி நலன்களைச் சீனா பேணிக்காக்கும் மனவுறுதி மாறாது.