ஆப்கானிஸ்தானுக்குச் சீனா ஆதரவு
2022-05-28 17:16:18

ஆப்கானிஸ்தான் தொடர்பான நான்காவது பிரதேசப் பாதுகாப்பு பேச்சுவார்த்தை 27ஆம் நாள் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் வெளிநாட்டு பாதுகாப்பு விவகார ஆணையர் செங் குயோபிங் கூறுகையில்,  உலகப் பாதுகாப்பு முன்மொழிவைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் முன்வைத்தார். இந்த எழுச்சியைக் கடைபிடித்து, இப்பிரதேச நாடுகளுடன் கூட்டாகப் பாடுபட்டு, ஆப்கானிஸ்தானை ஆதரித்து, பல்வேறு அறைகூவல்களைச் சமாளிக்கச் சீனா விரும்புகின்றது என்றார். மேலும், இப்பேச்சுவார்த்தையில், சக பிரதிநிதிகளுடன் மேற்கூறிய பிரச்சினைகள் பற்றி கருத்துக்களை ஆழமாகப் பரிமாறி, ஒத்த கருத்துக்களை எட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.