ஹன் மெய்லினின் கலைப் படைப்புகள்
2022-05-28 15:51:08

சீனாவின் அன்ஹுய் மாநிலத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட கலை அருங்காட்சியகத்தில் ஹன் மெய்லின் கலைக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தேசத்தின் பழம்பெரும் ஓவியரான ஹன் மெய்லின்னின் 400-க்கும் மேற்பட்ட சிறந்த கலைப் படைப்புகள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

எழுத்துக் கலை, மை ஓவியம், சிற்பம், மட்பாண்டங்கள், மரம் செதுக்குதல், இரும்புக் கலை, நாட்டுப்புறக் கைவினைகள் ஆகிய துறைகளில் ஹன்னின் சாதனைகளை வெளிக்காட்டும் விதம் இக்கண்காட்சி அமைந்துள்ளது.

இக்கண்காட்சியை, உள்ளூர் கலைஞர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். கண்காட்சிக்கான நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் 2 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து விட்டதாக அன்ஹுன் கலை அருங்காட்சியக இயக்குநர் வங் லிங் தெரிவித்தார்.