சீனா மீதான புதிய கொள்கையின் உண்மை நோக்கம் என்ன?
2022-05-28 17:25:29

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ப்ளிங்கன் மே 26ஆம் நாள் ஜார்ஜ் வாஷின்டங் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையில், சீனா மீது“முதலீடு, கூட்டணி, போட்டி”ஆகியவை மையமாகக் கொண்ட புதிய கொள்கைக் கருத்தை அறிவித்தார். ஆனால், சமீபத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன், ஆசியாவில் பயணம் மேற்கொண்ட போது, இந்தோ-பசிபிக் நெடுநோக்கு திட்டத்தை வெகுவாகப் பிரச்சாரம் செய்திருந்தார். சீனாவை ஒடுக்கும் அமெரிக்காவின் உண்மையான நோக்கம், இச்சம்பவங்கள் மூலம் காட்டப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களின் அதிகரிப்பு, கடும் பணவீக்கம், பொருட்கள் பற்றாக்குறை, எண்ணெய் விலை உயர்வு முதலியவற்றின் பாதிப்பினால், பைடனின் ஆதரவு விகிதம் 36 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், இடைக்கால தேர்தலின் தேவையை நிறைவு செய்யும் வகையில்,  சீனாவின் அச்சுறுத்தல் எனும் கருத்தை மிகைப்படுத்தி, ஜனநாயகக் கட்சிக்கு மேலும் அதிக வாக்குகளை ஈட்டுவது, ப்ளிங்கன் உரையின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.