ஏழைகளுக்கு நிவாரணத் தொகை – பாகிஸ்தான் அறிவிப்பு
2022-05-29 16:49:25

பாகிஸ்தானில் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு நிதி ஆதரவு அளிக்கும் விதம், புதிய நிவாரணத் தொகை உதவியாக, 14 கோடி டாலர் நிதியை அந்நாட்டு தலைமை அமைச்சர் ஷபாஸ் ஷாரிஃப் அறிவித்துள்ளார்.

பெட்ரோலியப் பொருள்கள் விலையேற்றத்தின் விளைவைக் குறைக்கும் விதம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், குறைந்த வருவாய் கொண்ட 1.4 கோடி குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரம் பாகிஸ்தான் ரூபாய் உடனடியாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.