சர்வதேச அமைதி காப்புத் தினம்
2022-05-29 16:48:49

மே 29ஆம் நாள்   20ஆவது சர்வதேச அமைதி காப்புப் படையினர்   தினமாகும். சீனப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, கடந்த   30 ஆண்டுகளில், சீன இராணுவம் தொடர்ச்சியாக ஐ.நா அமைதி காக்கும்  25 நடவடிக்கைகளுக்கு, ஏறக்குறைய 50 ஆயிரம் அதிகாரிகள்   மற்றும் வீரர்களை அனுப்பியுள்ளது. நடைமுறை நடவடிக்கைகளால், உலக அமைதியைச் சீனா பேணிக்காத்து   வருகின்றது.

அமைதி முறையில்   சர்ச்சையைத் தீர்ப்பது, பிரதேசங்களின் பாதுகாப்பையும் நிதானத்தையும்   பேணிக்காப்பது, முகாமிடம் இருக்கும் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை   முன்னேற்றுவது ஆகியவற்றில் சீன அமைதி காப்புப்படை முக்கியப் பங்காற்றி   வருகின்றது.