உலகின் மிகப் பெரிய தொழில் கல்வி அமைப்புமுறை சீனாவில் உருவாக்கம்
2022-05-29 16:45:00

சீனக் கல்வி அமைச்சகத்தின் தகவலின்படி, உலகளவில் தொழில் கல்விக்கான மிகப் பெரிய அமைப்புமுறையை சீனா உருவாக்கியுள்ளது. தற்போது சுமார் 11 ஆயிரத்து 200 தொழில் கல்விக் கூடங்களில், 2 கோடியே 91 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் நடு மற்றும் மேல்நிலை தொழில் பள்ளிகள், தொழில் திறன் கொண்ட 1 கோடி திறமைசாலிகளை உருவாக்கி வருகின்றன. பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை முன்னெடுத்து, நாட்டின் போட்டியாற்றலை உயர்த்துவதற்கு, இத்தொழில் கல்விக் கூடங்கள் போதுமான மனித வளத்தை வழங்கி வருகின்றன.

இந்த அடிப்படையில், இவ்வாண்டு மார்ச் திங்கள் தேசியத் தொழில் கல்வியின் துடிப்பான இணைய மேடை இயங்கத் தொடங்கியது. மக்கள் அனைவரும் இணையம் வழியாக, தொழில் கல்வி பெறுவதற்கு இம்மேடை, எண்ணியல் வளங்களை வழங்கி வருகிறது.