அமெரிக்காவின் தவறான கருத்துக்கள்
2022-05-29 16:47:23

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் நாட்டுக் கொள்கை பற்றி அண்மையில் உரை நிகழ்த்திய போது, சர்வதேச ஒழுங்கிற்கு மிக தீவிரமான நீண்டகால அறைகூவல்களைச் சீனா உருவாக்கியுள்ளது என்றார். சர்வதேச நிலைமை மற்றும் சீன-அமெரிக்க உறவில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? என்ற கேள்விக்குச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பதிலளிக்கையில் சீனாவை இலக்காக நிகழ்த்திய இந்த உரை, தனது உலகக் கண்ணோட்டம், சீனாவின் பார்வை மற்றும் சீனா-அமெரிக்க உறவுப் பார்வையில் ஏற்பட்ட கடுமையான விரிசல்களை பிரதிபலிக்கிறது என்று மே 28ஆம் நாள் கூறினார்.

சீனா, அமெரிக்காவால் கற்பனை செய்யப்பட்ட சீனா அல்ல. 140 கோடி சீன மக்கள் நவீனமயமாக்கக் காலத்தில் இருப்பது, மனிதக் குலத்தின் மாபெரும் முன்னேற்றம். அது, உலகத்துக்கு அச்சுறுத்தல் அல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.