நேபாளத்தில் 22 பயணிகளுடன் விமானம் மாயம்
2022-05-29 16:50:07

நேபாளத்தின் போக்ராவிலிருந்து மஸ்டங் மாவட்டத்துக்கு 22 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை மாயமாகியதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டாரா ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான இவ்விமானம், போக்ரா விமான நிலையத்தில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விட்டது. விமானத்தில் 19 பயணிகளும், 3 விமான ஊழியர்களும் இருந்தனர்.

பயணிகளில் ஒரு சிலர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது, ஆனால், அவர்களின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.