நேபாள விமான விபத்து – 14 பேரின் உடல்கள் மீட்பு
2022-05-30 18:51:34

நேபாளத்தில் பயணியர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணயைம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான இவ்விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள் உள்பட 19 பயணிகள் பயணித்துள்ளனர்.

மஸ்டங் மாவட்டத்தின் மலைப்பகுதியில் இவ்விமானம் விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக ராணுவம் மேற்கொண்டு வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணி தடைப்பட்டுள்ளதாக மஸ்டங் மாவட்ட தலைமை அதிகாரி நேத்ரா தெரிவித்தார்.