இலங்கையில் பொருளாதாரத் தீர்வுக்கு 5 குழுக்கள்
2022-05-30 18:52:19

இலங்கையில் நிலவி வரும் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் விதம் 5 நிதிக் குழுவும், 10 மேற்பார்வைக் குழுவும் விரைவில் அமைக்கபட உள்ளதாக அந்நாட்டு தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தற்போது நிதித் துறையில் 3 குழுக்கள் உள்ளதாகவும், அவற்றுடன் புதிய குழுக்கள் விரைவில் இணையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தின் கொள்கைகளுக்கான 10 மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்படும், அவற்றின் பரிந்துரைப்படி நாடாளுமன்றம் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அமைப்பை மாற்ற வேண்டும் என்று இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்று கோருகின்றனர். நாட்டில் தற்போது நிலவும் சூழல்களை அறிந்து கொள்ளவும் அவர்கள்  விரும்புகின்றனர். எனவே, 15 குழுவில் ஒவ்வொரு குழுவிலும் 4 இளைஞர்கள் பிரதிநிதிகளாகச் சேர்க்கப்படுவர் என்றும் அவர் முன்மொழிந்துள்ளார்.