அமெரிக்க இசை விழாவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம்
2022-05-30 10:17:02

அமெரிக்க செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் படி, அமெரிக்காவின் ஓக்லாஹோமா மாநிலத்தில் 29ஆம் நாள் நடைபெற்ற இசை விழாவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். வயதுக்கு வராதவர் இருவர் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.

இப்போது ஐயத்துக்குரிய குற்றவாளி எவரும் கைது செய்யப்படவில்லை என்று அம்மாநிலத்தின் புலனாய்வு பணியகம் கூறியது.

அமெரிக்க துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகம் என்னும் இணையத்தளம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டு முதல் 5 மாதங்களில், அமெரிக்காவில் 17 ஆயிரத்திற்கும் மேலானோர் துப்பாக்கியுடன் தொடர்புடைய சம்பவங்களில் உயிரிழந்தனர். இவர்களில் 640 பேர் வயதுக்கு வராதவர்களாவர்.