சீனாவில் வெளிநாட்டு முதலீட்டு வணிகச் சூழல்
2022-05-30 18:15:48

2022ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் சீனாவில் வெளிநாட்டு முதலீட்டு வணிகச் சூழல் குறித்த ஆய்வு அறிக்கை மே 30ஆம் நாள் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையின் படி, 2021ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், 71 விழுக்காட்டு வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள், தங்கள் வணிக அளவை நிலைநிறுத்தி உள்ளன. 72.1 விழுக்காட்டுத் தொழில் நிறுவனங்கள், சீனாவிலுள்ள முதலீட்டை 5 விழுக்காட்டுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளன. வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனாவில் தங்கள் வளர்ச்சி வாய்ப்புகளின் மீது தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளன. 13.5 விழுக்காட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் எதிர்காலத்தில் சீனாவில் முதலீட்டுத் தொகையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.