அமெரிக்காவின் புதிய கரோனா பாதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு
2022-05-30 10:41:59

தி ஹில் எனும் அமெரிக்க செய்தித்தாள் 29ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, கோடைக்காலம் துவங்கியது முதல், அமெரிக்காவில்  7 நாட்களுக்குச் சராசரி புதிய கரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 6 மடங்குக்கு மேலே அதிகமாகும்.

கோடைக்காலத்தில் அதிகரிக்க கூடிய புதிய சுற்று கரோனா பாதிப்புகளைச் சமாளிக்க அமெரிக்கா ஆயத்தம் செய்ய வேண்டும் என்று வெள்ளை மாளிகையின் கொரொனா வைரஸ் பணிக்குழுவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் டெபோரா பிர்க்ஸ் இதற்கு முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.