உலகளவில் பரவி வருகின்ற குரங்கு அம்மை நோய்
2022-05-30 13:55:55

உலகச் சுகாதார அமைப்பு மே 29ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, மே 13 முதல் 26ஆம் நாள் வரை, முன்பு குரங்கு அம்மை நோய் பரவல் இல்லாத 23 நாடுகளில், 257 நபர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 120 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பின் அளவு விரிவாக்கப்படுவதுடன், குரங்கம்மை பாதிப்புகள் மேலதிகமாகக் கண்டறியப்படக்கூடும். மக்களுக்கிடையில் இந்நோய் விரிவான முறையில் பரவி வருகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குரங்கு அம்மை நோயின் உலகளாவிய பொது சுகாதார அபாயம் நடுநிலையில் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.