அரிதான தரவுகளைத் திரட்டியுள்ள ஆகாய மிதவை படகு
2022-05-30 10:27:10

சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த ஆகாய மிதவை படகு அண்மையில் 10 முறை வளிமண்டல அறிவியல் கண்காணிப்புகளை நிறைவேற்றியுள்ளது. அது வானில் அதிகபட்சமாக 9050 மீட்டரை எட்டி, ஜொல்மோலுங்மா சிகரத்தைத் தாண்டி, வளிமண்டல அறிவியல் ஆய்வில் மிதவை படகு எட்டியுள்ள உயரத்தின் உலக சாதனையை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது தரவுகளின் ஆய்வுக் கட்டம் தொடங்கியுள்ளது.

சீனாவின் அறிவியல் ஆய்வுக் குழு ஜொல்மோலுங்மா சிகரப் பகுதியில் வளிமண்டல மாற்றம் தொடர்பான மதிப்புமிக்க பல தரவுகளைப் பெற்றுள்ளது இதுவே முதன்முறையாகும். அறிவியலாளர்கள் இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி, உலகளாவிய வளிமண்டல பரப்புகை மாதிரியை உருவாக்கி, ஆசிய நீர் கோப்புரம் பற்றிய ஆய்வை முன்னேற்றி வருவார்கள்.