எல்லைப் பிரச்சினை இரு நாட்டுறவைப் பாதிக்க கூடாது:சீனா
2022-05-31 18:48:26

எல்லைப் பிரச்சினை சீன-இந்திய உறவை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று சீனா கருதுவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ் லீச்சேன் 31ஆம் நாள் தெரிவித்தார்.

இந்திய வணிக அமைச்சகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, அமெரிக்கா சீனாவைத் தாண்டி இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக மாறியுள்ளது. இது குறித்து சாவ் லீச்சேன் கூறுகையில், இந்தியா இதர நாடுகளுடன் இயல்பான வர்த்தக உறவை வளர்ப்பதில் சீனாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று தெரிவித்தார்.

தற்போது சீன-இந்திய எல்லை பகுதியில் அமைதி நிலவுகிறது. தூதாண்மை மற்றும் ராணுவத் துறையில் இரு தரப்புகளுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு நிலைநிறுத்தப்படுவதாக அவர் கூறினார். தவிரவும், இந்தியாவிலுள்ள சீன முதலீட்டு நிறுவனங்களுக்கு நேர்மையான பாகுபாடற்ற வணிக சூழ்நிலையை இந்தியா வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.