சீனாவுக்கும் பசிபிக் தீவு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புக்கு அமெரிக்கா கவலை
2022-05-31 20:27:00

சீன-பசிபிக் தீவு நாடுகளின் 2ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பல பொதுக் கருத்துக்கள் எட்டப்பட்டுள்ளன. சீனாவுக்கும் தொடர்புடைய நாடுகளுக்குமிடையிலான உறவின் ஆற்றலை இது காட்டியுள்ளது. இக்கூட்டத்துக்குப் பிறகு பிசிபிக் தீவு நாடுகளுடன் ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்தல் மற்றும் கூட்டு வளர்ச்சி குறித்த சீனாவின் நிலைப்பாடு அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆனால், தெற்கு பசிபிக் பிரதேசத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பைச் சீனா பெரிய அளவில் விரிவாக்குவது கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் தெரிவித்துள்ளன. இது மேலாதிக்கவாதம் மற்றும் வல்லரசு சிந்தனையாகும்.

புள்ளிவிவரங்களின் படி, 1992ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, சீனாவுக்கும் பசிபிக் தீவு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தக அளவு, 30 மடங்குக்கு மேல் விரிவடைந்துள்ளது. நீண்டகாலமாக, எந்த அரசியல் நிபந்தனைகளும்  இல்லாமல் பொருளாதாரத் தொழில் நுட்ப மற்றும் மருத்துவ உதவிகளையும் அந்த நாடுகளுக்கு சீனா வழங்கி வருகின்றது.

புவிசார் அரசியலை ஆர்வத்துடன் கையாள்வதற்குப் பதிலாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகள், பசிபிக் தீவு நாடுகளின் வளர்ச்சிக் கோரிக்கைகளை உணர்வுப்பூர்வமாக கேட்டுக் கொள்ள வேண்டும். சீனாவைப் போல இப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு உண்மையான உதவிகளை வழங்குவதே சரியான செயலாகும்.