சீனாவில் மீட்சி அடைந்து வருகின்ற சரக்கு போக்குவரத்து
2022-05-31 11:08:58

சரக்கு போக்குவரத்து உத்தரவாதப் பணிக்கான சீன அரசவையின் தலைமைக் குழு அலுவலகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, சீனாவின் சரக்கு போக்குவரத்து துறை தொடர்ச்சியாக மீட்சியடைந்து வருகிறது. மே 30ஆம் நாள், தொடர்வண்டிகளின் மூலம் ஏற்றியிறக்கப்பட்ட சரக்குகளின் அளவு 1 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரம் டன்னை எட்டியது. முந்தைய நாளில் இருந்ததை விட இது 0.5 விழுக்காடு அதிகம். உயர் வேக நெடுஞ்சாலைகளின் மூலம் பயணம் மேற்கொண்ட சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை 70 லட்சத்து 93 ஆயிரத்து 400 ஆகும். முன்பை விட இது 12.62 விழுக்காடு அதிகம். மேலும், முக்கிய துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு 3 கோடியே 46 லட்சத்து 9 ஆயிரம் டன்னை எட்டியது. கையாளப்பட்ட சரக்குக் கொள்கலன்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 92 ஆயிரம் ஆகும். அதேநாள் விரைவஞ்சல் சேவை மூலம் அனுப்பப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 31.5 கோடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.