சீன ஆக்கத்தொழிலின் கொள்வனவு மேலாளர் குறியீடு உயர்வு
2022-05-31 11:43:33

சீன சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனம், சீன தேசிய புள்ளிவிவரப் பணியகத்தின் சேவைத் தொழில் ஆய்வு மையம் ஆகியவை மே 31ஆம் நாள் கூட்டாக வெளியிட்ட தரவுகளின்படி, மே திங்கள் சீன ஆக்கத்தொழிலின் கொள்வனவு மேலாளர் குறியீடு ஏப்ரலில் இருந்ததை விட 2.2 புள்ளிகள் அதிகரித்து, 49.6 விழுக்காட்டை எட்டியுள்ளது. கோவிட்-19 நோய் தொற்று பரவல் கட்டுப்பாட்டு நிலைமை மேம்பட்டு வருவதுடனும், பல கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடனும், தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் சந்தை தேவைகள் ஓரளவு அதிகரித்து, பொருளாதாரச் செயல்பாடுகள் மீட்சியடைந்து வருவதை இது காட்டுகிறது.