சீன-பசிபிக் தீவு நாடுகளின் 2ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
2022-05-31 10:30:13

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 30ஆம் நாள் பிஜி தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான ஃப்ராங்க் பைனிமராமாவுடன் இணைந்து சீன-பசிபிக் தீவு நாடுகளின் 2ஆவது வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இதில் வாங்யீ கூறுகையில், பசிபிக் தீவு நாடுகளுடனான ஒத்துழைப்பு கால முன்னேற்றப் போக்கிற்குப் பொருத்தமானது. பிரதேச மக்களுக்கு நன்மை தந்து பெரும் உயிராற்றல் மற்றும் வாய்ப்புகளை வெளிக்காட்டியுள்ளது என்பது உண்மைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். வறுமை நிவாரணம்,  காலநிலை மாற்றச் சமாளிப்பு, பேரழிவு தடுப்பு, வேளாண்மை, ஜுன்சாவ்(JUNCAO) மையம் உள்ளிட்ட 6 புதிய ஒத்துழைப்பு மேடைகளைச் சீனா தொடர்ந்து உருவாக்கும் என்றும் வாங்யீ தெரிவித்தார்.