ஷாங்காய் மாநகரில் உற்பத்தி மற்றும் வாழ்க்கை மீட்சி
2022-05-31 11:26:56

ஷாங்காய் மாநகரில் மே 31ஆம் நாள் நடைபெற்ற கோவிட்-19 பரவல் தடுப்புக்கான செய்தியாளர் கூட்டத்தில், ஷாங்காய் மாநகராட்சித் துணைத் தலைவர் சோங் மிங் கூறுகையில், நடப்புச் சுற்று வைரஸ் பரவல் தொடங்கியது முதல் இதுவரை, பூஜியம் கரோனா பாதிப்பு கோட்பாட்டை ஷாங்காய் மாநகர அரசு கடைப்பிடித்து, வைரஸ் பரவலை உறுதியாகக் கட்டுப்படுத்தி, பொது மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்திற்கு உத்தரவாதம் அளித்து வருகிறது என்றார்.

மேலும், ஷாங்காயின் குறிப்பிட்ட பொது பணித்திட்டத்தின்படி, ஜுன் முதல் நாள் தொடங்கி, வைரஸ் பரவல் கட்டுப்பாட்டின் அடிப்படையில் இம்மாநகரில் உற்பத்தி மற்றும் வாழ்க்கை ஒழுங்கு இயல்பான நிலைக்கு மீட்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.