குழைந்தைகளைப் பாதுகாக்கத் தவறிய நாட்டில் மனித உரிமை உள்ளதா?
2022-05-31 20:28:24

ஒரு வாரத்துக்கு முன் அமெரிக்காவிலுள்ள ரோபு துவக்கப் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடும் சம்பவத்தில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியாயினர். இதை அறிந்து அமெரிக்கா மட்டுமல்ல உலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது. குழந்தைகளைப் பாதுகாக்க விரும்பாத அமெரிக்கா ஒரு நாகரிக நாடா? என்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டது.

ரோபுப் பள்ளி சம்பவம் அமெரிக்காவின் பள்ளி வளாகத்தில் இவ்வாண்டில் நிகழ்ந்த 137ஆவது துப்பாக்கிச் சூடும் சம்பவமாகும். எந்த ஒரு நாட்டிலும் குழந்தைகள் மக்களின் விருப்பமும், எதிர்காலமும் ஆகும். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய குழுவாகும். குழந்தைகளின் மீது காட்டும் அன்பு, ஒரு சமூகத்தின் நாகரிக தரத்தையும் ஒரு நாட்டின் மனித உரிமை நிலைமையையும் காட்டுகின்றது.

இந்த நாட்டுக்கு அதன் பொது மக்களான மகளிரையும், சிறுபான்மை தேசிய இனத்தவர்களையும், குறிப்பாக குழந்தைகளைப் பாதுகாக்கவும் அன்பு காட்டவும் விருப்பம் இல்லை. இதுதான், அமெரிக்காவில் மேலாண்மையற்ற நிலைமை ஏற்படுவதற்குக் காரணமாகும்.