முழு உலகமும் எதிர்கொள்ளும் மூன்று நெருக்கடிகள்
2022-06-01 11:04:47

சர்வதேச எரியாற்றல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஃபதிஹ் பிரோல் மே 31ஆம் நாள் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில், உலகின் எரியாற்றல் அமைப்புமுறையின் அடித்தளமாக ரஷியா திகழ்கிறது. ரஷிய-உக்ரைன் மோதலாலும், ரஷியா மீதான மேலை நாடுகளின் தடைகளாலும், எண்ணெய், இயற்கை வாயு, மின்னாற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடைய மூன்று நெருக்கடிகளை முழு உலகமும் ஒரேநேரத்தில் எதிர்நோக்குகிறது என்று தெரிவித்தார். மேலும், கோடைக்கால விடுமுறையின் வருகையுடன், அமெரிக்காவில், குறிப்பாக ஐரோப்பிய பிரதேசத்தில் எரிபொருட்களின் பற்றாக்குறை ஏற்படக் கூடும். ஏனென்றால், ஜரோப்பாவின் கச்சா எண்ணெய் மட்டுமல்ல, பெட்ரோலிய தயாரிப்புகளும் இறக்குமதியைச் சார்ந்திருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.