ஷி ச்சின்பிங்-முகமது தொலைபேசி உரையாடல்
2022-06-01 10:35:17

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 31ஆம் நாள் ஐக்கிய அரபு அமீரக அரசுத் தலைவர் முகமதுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

இருதரப்பு கூட்டு முயற்சியுடன் சீனா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு இடைவிடாமல் வலுவடைந்து, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளும் முன்பு கண்டிராத நிலைக்கு எட்டியுள்ளன என்றும், ஐக்கிய அரபு அமீரகம் தனது அரசுரிமை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்கும் சொந்த நிலைமைக்குப் பொருத்தமான வளர்ச்சி வழிமுறையைத் தேடுவதற்கும் சீனா உறுதியாக ஆதரவு அளிக்கின்றது. ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து, சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டையும் வளரும் நாடுகளின் நலனையும் பேணிக்காக்க சீனா விரும்புகின்றது என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற ஐக்கிய அரபு அமீரகம் விரும்புகின்றது. கடந்த காலத்திலும் இப்போதும் எதிர்காலத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் சீனாவுடன் உறுதியாக இருக்கும் என்று முகமது தெரிவித்தார்.