அன்னிய முதலீட்டுக்கு நம்பிக்கை ஊட்டும் ஷாங்காய் மீட்சி
2022-06-01 20:28:29

ஷாங்காய் மாநகரின் இயல்பு வாழ்க்கையும் ஒழுங்கு நிலையும் ஜுன் முதல் நாள் திரும்பியது. சீனாவின் வணிகம் மற்றும் நிதி மையம், தயாரிப்புத் தொழில் மையம் மற்றும் உலகளவில் மிக அதிகமான கொள்கலன்களைக் கையாளும் திறன் கொண்ட துறைமுகமாக, ஷாங்காய் திகழ்கிறது.

ஷாங்காயின் மீட்சி, உலக விநியோகச் சங்கிலியின் மேம்பாட்டை முன்னெடுக்கக் கூடும். அதே வேளை, சீன நுகர்வுச் சந்தையின் மீட்சி, உலகத் தொழில் நிறுவனங்களுக்கும் நலன்களை விளைவிக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. நோய் பரவலின் குறுகியக் கால தாக்கம், சீனப் பொருளாதாரத்தின் நீண்டகால வளர்ச்சியைப் பாதிக்காது என்று சந்தை ஆய்வாளர்கள் பொதுவாகக் கருதுகின்றனர்.