சீனா ஈர்த்த வெளிநாட்டு முதலீட்டுத் தொகை அதிகரிப்பு
2022-06-01 16:33:37

2012ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, உலக முதலீட்டுக்கான முக்கிய இடமாகச் சீனா திகழ்ந்து வருகின்றது. 2021ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 15 ஆயிரம் கோடி யுவான் வெளிநாட்டு முதலீட்டைச் சீனா ஈர்த்தது. இது, 2012ஆம் ஆண்டை விட 62.9 விழுக்காடு அதிகம். 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளாக, அதிக வெளிநாட்டு முதலீட்டைப் பெற்றதில் உலக அளவில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.