சீனாவும் அமெரிக்காவும் சக வாழ்வு முறையை தேட வேண்டும்: கிஸ்ஸிங்கர்
2022-06-01 12:10:57

பெரிய நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் சக வாழ்வு கோட்பாட்டை உருவாக்கி, எதிரெதிர் நிலையைக் கூட்டாக தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கிஸ்ஸிங்கர் மே 31ஆம் நாள் தெரிவித்தார்.

கிஸ்ஸிங்கர் மற்றும் சீன-அமெரிக்க உறவு என்ற தலைப்பில் காணொளி வழியாக நடைபெற்ற கருத்தரங்கில் கிஸ்ஸிங்கர் கலந்து கொண்டு, தற்போதைய சீன-அமெரிக்க உறவு பற்றி மேற்கூறிய கருத்துக்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாறுடைய சீனாவின் அரசாட்சி மற்றும் தூதாண்மை கொள்கைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. சீனாவை விட மேலும் இளமையான அமெரிக்காவின் கொள்கைகள் யதார்த்த அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலைமையில் இருநாடுகள் சக வாழ்வுக்கான முறையைத் தேடிக் கண்டுபிடித்து, எதிரெதிர் நிலையைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், எதிரெதிர் நிலை, மோதலை, இராணுவ மோதலைக் கூட ஏற்படுத்தக் கூடும் என்று குறிப்பிட்டார்.

தவிரவும், தற்போது இருதரப்புகளின் பொறுப்புகள் 50 ஆண்டுகளுக்கு முன்பை விட மேலும் அதிகம். இருநாடுகள் பேச்சுவார்த்தையின் மூலம் மற்றொரு தரப்பின் மைய நலன்களை முழுமையாக அறிந்து கொண்டு, ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததோடு, இருநாடுகளின் பேச்சுவார்த்தை இருநாடுகள் மற்றும் உலகிற்கு நிரந்தர அமைதியைக் கொண்டு வர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.