2022ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டுப் பெண்களின் தலைமை மன்றக்கூட்டம்
2022-06-01 09:25:24

2022ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாட்டுப் பெண்களின் தலைமை மன்றக்கூட்டம் மற்றும் பிரிக்ஸ் நாட்டுப் பெண்களின் புதுமை போட்டிக்கான விருது வழங்கும் விழா மே 31ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இவ்வாண்டு பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இம்மன்றக்கூட்டம் திகழ்கிறது. பிரிக்ஸ் நாடுகளின் தொழில் மற்றும் வணிக துறைகளைச் சேர்ந்த பெண்கள் இந்நிகழ்ச்சியில் ஆக்கமுடன் பங்கெடுத்தனர்.

தகவலின்படி, 449 பேர் நடப்பு பிரிக்ஸ் நாட்டுப் பெண்களின் புதுமை போட்டிக்குப் பெயர்களைப் பதிவு செய்தனர். கடந்த ஆண்டில் இருந்ததை விட 117 விழுக்காடு அதிகமாகும்.

மேலும், பிரிக்ஸ் நாட்டுப் பெண்களின் வளர்ச்சி பற்றிய அறிக்கை இம்மன்றக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.