டிராகன் படகு தயாரிப்புத் தொழிலில் ஈடுப்படுகின்ற இளைஞர்
2022-06-02 11:53:13

இவ்வாண்டு ஜுன் 3ஆம் நாள் சீனப் பாரம்பரிய டிராகன் படகு விழாவாகும். சீனாவின் குவாங்தொங் மாநிலத்தின் சியாஷா கிராமத்தைச் சேர்ந்த ட்சாங் சாவ்வெய் என்பவர் டிராகன் படகுகளின் தலை மற்றும் வால் பகுதிகளைச் சுறுசுறுப்பாகத் தயாரித்து வருகின்றார். கைவினை தொழில் மூலம் இவற்றைத் தயாரிப்பது கடினம். டிராகன் தலை ஒன்று தயாரிக்கப்படுவதற்கு சுமார் 10 நாட்கள் தேவை. தற்போது, வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனர்கள், அவர் தயாரித்த டிராகன் தலைகளை வாங்கி, சொந்த ஊரின் பண்பாட்டை வெளிநாடுகளுக்குப் பரவல் செய்ய விரும்புகின்றனர்.